கிராமிய, பிரதேச மற்றும் மாவட்ட நிருவாகத்தினை வலுப்படுத்துதல் தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான தேவையாகும். அதற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் கொள்கைகள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவதுடன், அது பற்றி பொது மக்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வூட்டலும் அத்தியாவசியமானதாகும்.

இலங்கையில் தற்போதைய தொழிநுட்ப நவீனமயப்படுத்தல், தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் விரைவான வளர்ச்சியின் காரணமாக பதிவாளர் நாயகம் திணைக்களம் இணைய வெப் தள தொழிநுட்பத்தினை உபயோகித்து சேவையினைப் பெறுபவர்களுக்கு விரைவாக தகவல்கள் மற்றும் சேவையினை வழங்குவதற்கு இணையத் தளத்தினை அறிமுகப்படுத்துவதற்கு மற்றும் பேணுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையினை பாராட்டுகின்றேன்.

தகவல்களினைப் பெற்றுக் கொள்ளும் சட்டத்தின் கீழ் சேவையினைப் பெற்றுக் கொள்பவர்களுக்குத் தேவையான தகவல்களினை மிகவும் விரைவாக எவ்விதமான விசாரணைகளும் இன்றி பெற்றுக் கொள்வதற்கு இந்த இணையத் தளம் உதவியளிக்கும் என்பது எனது விசுவாசமாகும்.