உரித்து பதிவு செய்தல்

காணியொன்றின் உரிமையைப் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆவணங்களை பதிவு செய்யும் முறைமைக்கு பதிலாக அரசாங்கத்தின் .உத்தரவாதத்துடன் காணியின் அமைவிடம், அதன் எல்லைகள் மற்றும் பரப்பளவு ஆகியவற்றை குறிப்பிடும் கிடை வரைபடம் (நிலவரைபடம்) உள்ளடக்கியவாறான விஷேட தனித்துவமான இலக்கத்தின் கீழ் உரித்து மற்றும் உரிமையின் தன்மையைக் குறிப்பிட்டு காணியின் ஏக உரிமையை பதிவுசெய்வதற்காக 1988 ஆம் ஆண்டின் 21ம் இலக்க உரித்து பதிவுசெய்தல் சட்டம் (பிம்சவிய நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய சட்டம்) இயற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்க்காக இணைந்து செயற்படும் நிறுவனங்கள்

  • நில அளவையார் திணைக்களம்
    • உரிமை கோரப்படும் காணிக்குரிய கடத்திரள் நிலவரைபடங்களை தயாரித்தல் / அதன் பிரதிகளை வழங்குதல்.
  • காணி உரித்து நிர்ணய திணைக்களம்
    • உரிய காணித்துண்டின் உரிமைச் சிக்கல்களைத் தீர்த்தல்
    • சட்டத்தின் பிரிவு 55 இன் பிரகாரம் பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் பிந்தைய உரிமையை உறுதி செய்தல்
  • பதிவாளர் நாயகம் திணைக்களம்
    • மேற்கூறிய கடத்திரள் நிலவரைபடங்களை  அடிப்படையாகக் கொண்டு காணி உரித்துகள் நிர்ணய திணைக்களத்தினால் கிடைக்கப்பெறும் துணை ஆவணங்களின் அடிப்படையில் மேற்கூறிய கடத்திரள் வரைபடத்தின் அடிப்படையில் உரித்துகளைப் பதிவு செய்தல்.
    • குறித்த காணி தொடர்பான பிந்தைய கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல்
    • பிரித்தெடுப்பு பிரதிகளை வழங்குதல்

இந் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அலுவலகங்கள்

பின்வரும் காணிப் பதிவகங்களில் உரித்து பதிவு செய்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

  1. தெல்கந்த
  2. ஹோமாகம
  3. அவிசாவளை
  4. கம்பஹா
  5. நீர்கொழும்பு
  6. அத்தனகல்ல
  7. அனுராதபுரம்
  8. கண்டி
  9. கம்பளை
  10. இரத்தினபுரி
  11. ஹம்பாந்தோட்டை
  12. தங்கல்ல
  13. குருணாகல்
  14. குளியாபிட்டிய
  15. மொனராகலை
  16. பதுளை
  17. பொலன்னறுவை
  18. திருகோணமலை
  19. மாத்தளை
  20. நுவரெலியா
  21. களுத்துறை
  22. பாணந்துறை
  23. ஹொரணை
  24. காலி
  25. மாத்தறை
  26. கேகாலை
  27. புத்தளம்
  28. மாரவில
  29. குண்டசாலை
  30. எல்பிட்டிய
  31. மஹர

மேற்படி அலுவலகங்களுக்கு மேலதிகமாக யாழ்பாண காணிப்பதிவு அலுவலகத்தில் உரித்து பதிவு செய்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த முறைமையின் கீழ் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள்

  • முழுப் பொறுப்பையும் அரசாங்கம் கொண்டிருப்பதால் உரிமை பலப்படுத்தப்படுகிறது.
  • காணியின் இருப்பிடம் பற்றிய சரியான தகவல்கள் உரித்துச் சான்றிதழால் உறுதி செய்யப்படுகிறது.
  • நில வரைபடம் தொடர்பாக அளவையியல் திணைக்களம் பொறுப்பேற்பதால் மீண்டும் நில வரைபடப் பிரதியைப் பெற வேண்டிய அவசியமில்லை.
  • உரித்துச் சான்றிதழ் உள்ள காணியை விற்பனை செய்யும் போது அல்லது கொள்வனவு செய்யும்போது சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால் கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் எளிதாகின்றன.
  • உரித்துச் சான்றிதழுக்கு உறுதிப் பத்திரத்தை விட அதிக அங்கீகாரம் உள்ளது.
  • இந்த முறைமையின் மூலம் காணி தகராறுகள், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் குறைக்க முடிகின்றது.
  • இந்த முறைமையின் கீழ் உரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு காணிக்கு பிரிவினைச் சட்டத்தின் கீழ் காணி வழக்குத் தொடர முடியாது. (1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்து பதிவுச் சட்டத்தின் பிரிவு

2023 ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் (900,000) உரித்துச் சான்றிதழ்கள் காணி உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

உரித்து காப்புறுதி நிதியம் – உரித்துக்களை நிர்ணயம் செய்யும் போது / பதிவு செய்யும் போது நட்டோத்தரவாதம் அளித்தல்

இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ், உரித்து தொடர்பான பதிவாளர் நாயகத்தின் முகாமைத்துவத்தின் கீழ், 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்து பதிவுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட உரித்து காப்புறுதி நிதியத்தினால் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் நட்டோத்தரவாதம் அளிக்கப்படும்.

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk