இதற்கமைய, காலி கடவத் சதர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் போபே பொத்தல பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள புதிய பயனாளிகளுக்கான தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு, காலி மாவட்டச் செயலகத்தில் இன்று காலை (24) நடைபெற்றது.காலி மாவட்ட காணி மற்றும் அபிவிருத்தி மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. சுமித் சாந்த அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தென் மாகாண பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் உதவிப் பதிவாளர் நாயகம் திருமதி துலானி எச். கீர்திசிங்க, காலி மாவட்டச் செயலகத்தின் உதவிப் பதிவாளர் நாயகம் திருமதி எம்.ஜி.எம். உபமாலிகா, போபே பொத்தல பிரதேச செயலாளர் திருமதி பியுமாலி லியனகே, கடவத் சதர பிரதேச செயலாளர் திரு. பசிந்து லக்ருவான் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.