திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள், 2025/08/25 அன்று பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் புதிய பதிவாளர் நாயகமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
புதிய நியமனத்திற்கு முன்னதாக, திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றினார்.