Accessibility Tools

Information Icon

விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளல்

சாதாரண திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்தல்

இந்தச் செயன்முறை முழுமையாக நீதிமன்ற நடவடிக்கை மூலமே முன்னெடுக்கப்படும். ஒரு சட்டத்தரணியைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானதாகும்.

விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்

கண்டிய திருமண விவாகரத்துச் சான்றிதழை பெற்றுக்கொள்ளல்

மாவட்டப் பதிவாளரினால் வழங்கப்பட்ட விவாகரத்துத் தீர்ப்பு தொடர்பாக மேன்முறையீடு எதுவும் செய்யப்படாத பட்சத்தில் (தீர்ப்பு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள்), மேன்முறையீட்டுக் காலம் முடிந்ததும் விவாகரத்துச் சான்றிதழ் பெண் தரப்பினருக்கு வழங்கப்படும்.

விவாகரத்து தொடர்பான மாவட்டப் பதிவாளரின் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பின், நீதிமன்ற கட்டளைக்கமைய சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரினால் விவாகரத்துச் சான்றிதழ் வழங்கப்படும்.