Accessibility Tools

Information Icon

  • காணிப் பதிவாளரால் ஆவணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 36(1) மற்றும் (2) ஆம் பிரிவுகளின் கீழ் நிராகரிக்கப்பட்ட ஆவணமொன்றை, அந்தச் சட்டத்தின் 38(2) ஆம் பிரிவின் கீழ் நிராகரிக்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவாளர் நாயகத்திற்கு மேன்முறையீடு செய்தல்.
  • மேன்முறையீடு செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
    • காணிப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட உறுதிப் பத்திரம்
    • மேன்முறையீட்டுக் கடிதம்
    • திருத்தங்களை உள்ளடக்கிய சத்தியக்கடதாசி (உறுதிப்பத்திரம் எழுதிச் சான்றுப்படுத்தப்பட்ட மொழியிலேயே சத்தியக்கடதாசி தயாரிக்கப்பட வேண்டும்)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சம்பந்தப்பட்ட காணிப் பதிவு அலுவலகத்தின் காணிப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.