பதவிநிலை வரிசை

பணிகள்
- சிவில் பதிவு, காணி மற்றும் உரிமைப் பதிவு சேவைகளுடன் தொடர்புடைய தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களைத் திட்டமிடல், அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல்.
- திணைக்கள மற்றும் பொதுச் சேவைகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் செயலி கட்டமைப்புகள் (Application Systems), தரவுத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை நிர்வகித்தல் மற்றும் செயற்படுத்தல்.
- அனைத்து ICT கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் தொடர்பான தரவுப் பாதுகாப்பு, தரவுத் துல்லியம், கட்டமைப்புகளை அணுகக்கூடிய தன்மை மற்றும் அணுகல் கட்டுப்பாடு (Access Control) என்பவற்றை உறுதிப்படுத்துதல்.
- சேவையகங்கள் (Servers), வலையமைப்பு கட்டமைப்புகள், தரவுச் சேமிப்பகங்கள் மற்றும் பயனர் கணினிகள் உள்ளிட்ட ICT உட்கட்டமைப்பு வசதிகளை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல்.
- திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச அலுவலகங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு நாளாந்த தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பயனர் உதவிச் சேவைகளை வழங்குதல்.
- அத்தியாவசிய ICT கட்டமைப்புகளுக்கான பாதுகாப்பு நகல் (Backup), அனர்த்தகால மீட்பு மற்றும் வர்த்தக தொடர்ச்சிநிலை நடைமுறைகளை செயற்படுத்தல் மற்றும் கண்காணித்தல்.
- அரச கொள்முதல் வழிகாட்டல்களுக்கு இணங்க ICT தொடர்பான கொள்முதல், மென்பொருள் உரிம மேலாண்மை மற்றும் விநியோகஸ்தர்களுடன் தொடர்புகளைப் பேணுதல்.
- தேசிய ஈ-அரசாங்கக் கொள்கைகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் மாற்றம், கட்டமைப்பு மேம்படுத்தல் மற்றும் செயன்முறை தன்னியக்கமாக்கல் ஆகியவற்றிற்கு ஆதரவளித்தல்.
- LGC, தரவு மையங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான தரவுப் பரிமாற்றங்களை ஒருங்கிணைத்தல்.