Accessibility Tools

Information Icon

பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை உங்கள் வீட்டிலிருந்தே இணையவழிச் சேவையின் ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

📌 பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதிகள்
  • பிறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்.
  • திருமணச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்.
  • இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்.
📦 ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள்
  • கோரப்பட்ட சான்றிதழ் eBMD அமைப்பில் (eBMD System) இருப்பின், அதனைத் நாடு முழுவதுமுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவிலும் ஒருநாள் சேவை (One Day Service) மூலம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையவழியாக (Online) விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
  • கோரப்பட்ட சான்றிதழ் eBMD அமைப்பில் இல்லாதிருப்பின், அது ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்ட பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவிலேயே பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் அல்லது அந்த குறிப்பிட்ட பிரதேச செயலகத்திற்கே இணையவழியாக (Online) விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் தமது பிறப்பு, மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை தாம் வசிக்கும் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள முடியும்.
📋 விண்ணப்பிக்கும் முறை
  • எமது இணையதளத்தைப் பார்வையிடவும்: https://online.ebmd.rgd.gov.lk
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும் – நீங்கள் கோருகின்ற பிறப்பு, திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழ் தொடர்பான துல்லியமான விபரங்களை உள்ளிடவும்.
  • கட்டணத்தைச் செலுத்தவும் - இதற்கான கட்டண இணைப்பு (Payment Link) 2 நாட்களுக்குள் உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதற்குப் பாதுகாப்பான இணையவழிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் சான்றிதழ் பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள் - நீங்கள் அதனை விரைவுத் தபாலில் (Express Mail) உங்கள் முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த முழுமையான செயல்முறைக்கு 5 வேலை நாட்கள் (Working days) எடுக்கப்படும்.

மேலதிக உதவிக்கு,தயவுசெய்து பயனர் கையேட்டை(PDF) பார்க்கவும்.

மேலதிக தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் பதிவாளர் பிரிவையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்  தொடர்புப் பட்டியலைப் பார்க்கவும். (PDF)

💳 பணம் செலுத்தும் முறைகள்
  • வங்கி அட்டைகள் (Visa / MasterCard)
📞 தொழில்நுட்ப உதவிக்கு

தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பிரிவு – பதிவாளர் நாயகம் திணைக்களம்
எங்களைத் தொடர்பு கொள்ளவும்:: 011 2889518
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.