Accessibility Tools

Information Icon

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட e-சிவில் பதிவு (e-Civil Registration) வேலைத்திட்டத்தின் கீழ், மின்னணு (Digital) தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (24) இரத்தினபுரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இரத்தினபுரி மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக பதிவாளர் நாயகம் திரு. கே.ஜி.எஸ். நிஷாந்த அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 2021 ஜனவரி 01 முதல் 2025 பெப்ரவரி 26 வரையான காலப்பகுதியில் பிறந்த பிள்ளைகள், இம்மாவட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தில் இந்தத் தேசிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும். பதிவாளர் நாயகம் திணைக்களம் இச்சேவையை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளது.

இந்த மின்னணு தேசிய பிறப்புச் சான்றிதழானது, பாரம்பரிய காகிதச் சான்றிதழுடன் ஒப்பிடும்போது நவீன மற்றும் பாதுகாப்பான ஒரு ஆவணமாகும். இதிலுள்ள தகவல்கள் மாற்றியமைக்க முடியாத வகையில் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுவதால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. மேலும், இது வெளிநாட்டுப் பயணம் மற்றும் சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட சர்வதேச பயன்பாடுகளுக்கு மிகவும் உகந்தது. இச்சான்றிதழானது சிங்களம் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. இதனால் பிறப்புச் சான்றிதழைத் தனியாக மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்துடன், சான்றிதழில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் தரவுத்தளத்தில் உடனுக்குடன் (Real-time) இற்றைப்படுத்தப்படும்.

மேலதிக விபரங்களுக்கு:  https://www.facebook.com/share/1DDzVkbnMt/