Accessibility Tools

Information Icon

பொதுமக்களின் அணுகல்தன்மையை அதிகரிப்பதற்கும் சேவை வழங்கலை முறைப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, பதிவாளர் நாயகம் திணைக்களம் தனது நவீனமயமாக்கப்பட்ட www.rgd.gov.lk எனும் இணையத்தளத்தை 2026 ஏப்ரல் 7 அன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. இந்த டிஜிட்டல் தளமானது, திணைக்களத்தின் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது குடிமக்களுக்கு மிகவும் வினைத்திறனான, வெளிப்படையான மற்றும் இலகுவான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் டிஜிட்டல் மாற்றத்திற்கு வலுசேர்க்கும் வகையில், திணைக்களத்தின் நடைமுறைகள் தொடர்பான பொதுமக்களின் வினவல்களுக்கு உடனடித் தீர்வுகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக ‘1930’ என்ற பிரத்யேக அவசர அழைப்பு இலக்கமும் (Hotline) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கௌரவ அமைச்சர் திரு. ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பிரதி அமைச்சர் திரு. ருவன் சேனாரத்ன, அமைச்சின் செயலாளர் திரு. அலோக பண்டார, பதிவாளர் நாயகம் திருமதி எஸ். ஜலதீபன் மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

1930 அழைப்பு மையமானது திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான பொதுமக்களின் வினவல்களுக்கு ஒத்தாசை வழங்குகின்றது. அதேவேளை, புதிய இணையத்தளம் திணைக்களம் சார்ந்த தகவல்கள் மற்றும் சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை வழங்குகின்றது.