திருமண (சாதாரண) பதிவு
இரு தரப்பினருமே முஸ்லிம் அல்லாத, வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவர்களும் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமண (சாதாரண) பதிவுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.
திருமண அறிவித்தல் இரண்டு பிரதிகளில் எழுதப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு, அந்தப் பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்குப் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்)
அறிவித்தலை உறுதிப்படுத்த அதிகாரம் உள்ளவர்கள்:
- அந்தப் பிரிவின் திருமணப் பதிவாளர்
- சமாதான நீதவான் (JP)
- பிரசித்த நொத்தாரிசு
- போதகர் / குருவானவர்
திருமண அறிவித்தல் ஒன்றை ஒப்படைப்பதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள்
- உரிய தரப்பினர் சம்பந்தப்பட்ட பிரிவில் வசிப்பது தொடர்பான தேவையைப் பூர்த்தி செய்தல்
- திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள், குறித்த தரப்பினர் அந்தப் பிரிவில் வசித்திருத்தல்.
- திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் அத்தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் வெவ்வேறு பிரிவுகளில் வசித்திருத்தல்.
- உரிய தரப்பினரில் ஒருவர் திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் இலங்கையில் வசித்திருத்தல், இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- இருவரில் ஒருவரேனும் திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- இரு தரப்பினரும் கடந்த பிறந்ததினத்திற்கு 18 வயது பூர்த்தியடைந்திருத்தல்.
- அவர்கள் திருமணம் செய்வதற்கு உறவினர்கள் தடையில்லை என்பது.
- அந்த நேரத்தில் செல்லுபடியாகும் வேறொரு திருமணம் இல்லை என்பது.
திருமண (சாதாரண) பதிவுக்காக திருமண அறிவித்தலை உரிய பதிவாளரிடம் ஒப்படைத்து 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும்.
அவ்வாறு 14 நாட்கள் கடப்பதற்கு முன்னர் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டுமாயின், விசேட அனுமதிப்பத்திரத்தின் கீழ் பதிவு செய்வதற்காக பதிவாளரிடம் கோரிக்கை விடுக்க முடியும்.
இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களிடம் திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் போது, அறிவித்தல்கள் பரிமாறப்பட்டு பதிவாளரின் சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.
திருமணப் பதிவாளரின் அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமாயின், அதற்காக விசேட அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அதற்காக உரிய கட்டணம் செலுத்தப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
** மேற்குறிப்பிட்ட விடயங்கள் பூர்த்தியடைந்த பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்வதுடன், திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.
திருமணப் பதிவின் போது மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு/ பதிவாளருக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள்:
|
இல. |
விடயம் |
யாருக்குச் செலுத்தப்பட வேண்டும்? |
யாரால் செலுத்தப் பட வேண்டும் |
கட்டணம் (ரூ.) |
கட்டணம் செலுத்தும் முறை |
|---|---|---|---|---|---|
|
1 |
பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்தில் திருமண அறிவித்தல் ஒன்றைச் சமர்ப்பித்தல். |
பதிவாளர் |
விண்ணப் பதாரர் |
120.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
2 |
மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்தில் திருமண அறிவித்தல் ஒன்றைச் சமர்ப்பித்தல். |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
விண்ணப் பதாரர் |
120.00 |
பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் |
|
3 |
திருமண அறிவித்தல் தொடர்பான பதிவாளரின் சான்றிதழை வெளியிடுதல். |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
120.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
4 |
திருமண அறிவித்தல் தொடர்பான மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் சான்றிதழை வெளியிடுதல். |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
திருமண தரப்பினர் |
120.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
5 |
பதிவாளரின் அலுவலகத்தில் திருமணத்தை நடாத்துதல் |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
6 |
மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணத்தை நடாத்துதல். |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்துதல் வேண்டும் |
|
7 |
38(1) அல்லது 38(2) பிரிவுகளின் கீழ் பதிவாளரின் அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தை நடாத்துதல். |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
----- |
----- |
----- |
|||
|
8 |
38(1) அல்லது 38(2) பிரிவுகளின் கீழ் மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தை நடாத்துதல் |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் |
|
9 |
27(3) பிரிவின் கீழ் விசேட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுதல். |
அரசாங்கத்திற்கு |
திருமண தரப்பினர் |
120.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
10 |
பதிவு செய்யப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலத்தில் நடாத்தப்பட்ட திருமணத்தைப் பதிவு செய்தல். |
மாவட்ட பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் |
|
11 |
38(1), (2) பிரிவுகளின் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான இல்ல அனுமதிப்பத்திரத்தை வெளியிடுதல். |
அரசாங்கத்திற்கு |
திருமண தரப்பினர் |
60.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
போதகர் ஒருவரால் திருமணம் நடத்தப்படுதல்
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது திருமணங்களைத் தேவாலயங்களில் நடத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
திருமண அறிவித்தல் இரண்டு பிரதிகளில் எழுதப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு, அந்தப் பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்குப் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பிரிவின் திருமணப் பதிவாளர்
- சமாதான நீதவான் (JP)
- பிரசித்த நொத்தாரிசு
- போதகர்/குருவானவர்
திருமண அறிவித்தல் ஒன்றை ஒப்படைப்பதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள்:
- உரிய தரப்பினர் சம்பந்தப்பட்ட பிரிவில் வசிப்பது தொடர்பான தேவையைப் பூர்த்தி செய்தல், அதாவது
- திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் தரப்பினர் அந்தப் பிரிவில் வசித்திருத்தல்.
- திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் அத்தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் வெவ்வேறு பிரிவுகளில் வசித்திருத்தல்.
- இருவரில் ஒருவரேனும் திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- தரப்பினர்கள், குறித்த பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல், அதாவது,
- இரு தரப்பினரும் கடந்த பிறந்ததினத்திற்கு 18 வயதினை பூர்த்தியடைந்திருத்தல்.
- அவர்கள் திருமணம் செய்வதற்கு உறவினர்கள் தடையாக இல்லை என்பது.
- அந்த நேரத்தில் செல்லுபடியாகும் வேறொரு திருமணம் இல்லை என்பது.
- விவாகரத்து பெற்றவர்களாயின், விவாகரத்துத் தீர்ப்புக்கட்டளையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- இலங்கையின் திருமண (சாதாரண) சட்டத்தின் கீழ் திருமணம் செய்து, பின்னர் வெளிநாட்டு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விவாகரத்து பெற்றிருப்பின், இலங்கையில் உரிய அதிகார வரம்புள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, அந்த விவாகரத்து தொடர்பான தீர்ப்புக்கட்டளையைப் பெற்றிருப்பது அவசியமாகும்.
பதிவு கட்டணம் ரூ. 900.00 ஆகும்.
பதிவாளர் அல்லது மேலதிக மாவட்டப் பதிவாளரிடமிருந்து “பதிவாளரின் சான்றிதழ்” (பதிவு படிவம் B103) பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அந்தப் பதிவாளரின் சான்றிதழைத் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவாலயத்தின் போதகரிடம் சமர்ப்பித்து, தேவாலயத் திருமணத்தை நடத்திக் கொள்ள முடியும்.
அதன் பின்னர் அருட்தந்தை வழங்கிய அருட்தந்தை சான்றிதழை (B112) தேவாலயம் அமைந்துள்ள பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பித்து உங்களின் சட்டப்பூர்வ திருமணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
இலங்கையர் ஒருவருக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கும் இடையிலான திருமணப் பதிவுச் செயன்முறை
பதிவாளரிடம் ஆணும் பெண்ணும் சம்பந்தமாகப் பின்வரும் விடயங்களின் கீழ் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
- திருமண அறிவித்தல் (2 பிரதிகளில் எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது)
- வெளிநாட்டவர் இலங்கைக்குள் நுழைவதற்குத் தேவையான விசா அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் அதன் நிழற்படப் பிரதி.
- தனது நாட்டு அதிகாரப்பூர்வ நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சிவில் நிலையை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் மூலப்பிரதி மற்றும் விவாகரத்து பெற்றவர்கள்/கைம்பெண்/விதவை எனின் அதனை உறுதிப்படுத்தும் சட்டபூர்வ ஆவணங்கள்.
- வெளிநாட்டவரின் சுகாதார நிலையை உறுதிப்படுத்துவதற்கான சுய அறிவித்தல்
- பிறப்புச் சான்றிதழ்கள் (பெயர் மற்றும் வயதை உறுதிப்படுத்தத் தேவைப்படின்) மற்றும் அதன் நிழற்படப் பிரதி.
- பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம்.
பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை:
வெளிநாட்டுப் பிரஜை இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, பின்வரும் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் (திருமணம் செய்யவுள்ள இருவர் அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஊடாக மாத்திரம்) திணைக்களத்தின் சிவில் பதிவுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பப் படிவம்
- இலங்கைப் பிரசையின் தேசிய அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி
- வெளிநாட்டுப் பிரசையின் கடவுச் சீட்டின் நிழற்படப் பிரதி
- வெளிநாட்டுப் பிரஜை குற்றவாளி அல்ல என்பதற்கான பொலிஸ் சான்றிதழ் (6 மாதங்களுக்குள் பெறப்பட்டது)
- வெளிநாட்டுப் பிரஜையின் சிவில் நிலை தொடர்பான சான்றிதழ் (6 மாதங்களுக்குள் பெறப்பட்டது). இதற்கு முன்னர் திருமணமானவர் எனின் விவாகரத்துச் சான்றிதழ் மற்றும் சிவில் நிலை தொடர்பான சான்றிதழ்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணத்தினதும் 4 பிரதிகள் வீதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
சிவில் நிலை தொடர்பான சான்றிதழ் அந்தந்த நாட்டின் அரச நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சத்தியக்கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட முடியுமான சந்தர்ப்பம் யாதெனில், அந்த நாட்டில் அரச நிறுவனங்களால் சிவில் நிலைச் சான்றிதழ்கள் வழங்கப்படாத பட்சத்தில் மாத்திரமே ஆகும். அந்த சத்தியக்கடதாசியும் அந்த நாட்டு அரச நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
திருமணப் பதிவானது பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவின் திருமணப் பதிவாளர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். திருமணப் பதிவாளர் மூலம் திருமணம் நடைபெறுமாயின், அந்தப் பதிவாளரின் பெயர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தின் பெயர் விண்ணப்பப்பத்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
விண்ணப்பப்பத்திரத்தில் திருமணம் நடைபெறும் திகதி, இடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டம் என்பன குறிப்பிடப்பட வேண்டும்.
ஆவணங்கள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து அனுமதி அறிக்கையைப் (Clearance Report) பெற்றுக்கொள்வதற்கு 14 வேலை நாட்கள் எடுக்கும்.
பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்கள் வரை செல்லுபடியாகும்.
இந்த அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் திருமண அறிவித்தலை ஒப்படைக்கும் போது சம்பந்தப்பட்ட மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது பிரிவின் திருமணப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான 18/2021 இலக்க மற்றும் 2021.10.18 திகதியிட்ட சுற்றுநிருபம் 2022.01.01 முதல் நடைமுறைக்கு வந்ததுடன், அதன் திருத்தப்பட்ட 18/2021(1) சுற்றுநிருபம் 2022.08.01 முதல் நடைமுறையிலுள்ளது.
கண்டிய திருமணச் சட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள்
கண்டிய சட்டத்தின் கீழ், அச் சட்டத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் சிங்கள இனத்தவர்கள் மாத்திரமே திருமணம் செய்ய முடியும்.
கண்டிய திருமணச் சட்டம் அமுலாகும் பிரதேசங்கள்:
- மத்திய மாகாணம்
- வட மத்திய மாகாணம்
- ஊவா மாகாணம்
- சப்ரகாமுவ மாகாணம்
- வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்திலுள்ள கிழக்கு மற்றும் மேற்கு சின்னவெட்டிக்குளம் கோரளை மற்றும் தெற்கு கிழக்குமலை கோரளை.
- கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிந்தன்ன பற்று, வேகம்பற்று, பானம பற்று மற்றும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கடுக்குளம் பற்று.
- வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் தெமள ஹத்பத்துவ.
கண்டியச் சட்டத்தின் கீழ் திருமணங்களைப் பதிவு செய்வதற்கு மேலே குறிப்பிட்ட பிரதேசங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள திருமணப் பதிவாளர்களுக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு.
கண்டியச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்வதற்குப் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள்
- இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட பிரிவில் வசிப்பது தொடர்பான தேவைகள்
- திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் தரப்பினர் அந்தப் பிரிவில் வசித்திருத்தல்.
- திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் வெவ்வேறு பிரிவுகளில் வசித்திருத்தல்..
- தரப்பினரில் ஒருவர் திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- இருவரில் ஒருவரேனும் திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
- இரு தரப்பினரும் கடந்த பிறந்ததினத்திற்கு 18 வயது பூர்த்தியடைந்திருத்தல்.
- இரு தரப்பினரும் திருமணம் செய்வதற்கு உறவினர்கள் தடையில்லை என்பது (1952 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க கண்டிய விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் படி)
- அந்த நேரத்தில் செல்லுபடியாகும் வேறொரு திருமணம் இல்லை என்பது.
மேற்குறிப்பிட்ட தேவைகள் பூர்த்தியடைந்திருப்பின், முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட திருமண அறிவித்தலை இரண்டு பிரதிகளில் பிரிவு திருமணப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும்.
திருமண அறிவித்தலை உறுதிப்படுத்துவதற்கு அந்தப் பிரிவின் திருமணப் பதிவாளருக்கே அதிகாரம் உண்டு. (பெயர் மற்றும் வயதை உறுதிப்படுத்துவதற்குப் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்)
திருமண அறிவித்தலை ஒப்படைத்து 14 நாட்கள் கடந்த பின்னர் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.
- திருமண அறிவித்தலை ஒப்படைத்து 14 நாட்களுக்கு முன்னரே திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டுமாயின், உரிய கட்டணத்தைச் செலுத்தி விசேட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களிடம் திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் போது, அறிவித்தல்கள் பரிமாறப்பட்டு பதிவாளரின் சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.
திருமணப் பதிவாளரின் அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டுமாயின், அதற்காக விசேட அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அதற்காக உரிய கட்டணம் செலுத்தப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
**மேற்குறிப்பிட்ட விடயங்கள் பூர்த்தியடைந்த பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்வதுடன், திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.
கண்டியத் திருமணப் பதிவிற்காக மேலதிக மாவட்டப் பதிவாளர்/ பதிவாளர்களினால் அறவிடப்படக்கூடிய கட்டணங்கள்:
|
இல. |
விடயம் |
யாருக்குச் செலுத்தப்பட வேண்டும்? |
யாரால் செலுத்தப் பட வேண்டும் |
கட்டணம் (ரூ.) |
கட்டணம் செலுத்தும் முறை |
|---|---|---|---|---|---|
|
1 |
பதிவாளர் அலுவலகத்தில் அல்லது வேறு ஏதேனும் ஓரிடத்தில் திருமண அறிவித்தலை சமர்ப்பித்தல் |
பதிவாளர் |
விண்ணப் பதாரர் |
120.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
2 |
மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது வேறு ஏதேனும் ஓரிடத்தில் திருமண அறிவித்தலை சமர்ப்பித்தல் |
மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளர் |
விண்ணப்பதாரர் |
120.00 |
பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் |
|
3 |
திருமண அறிவித்தல் தொடர்பான பதிவாளரின் சான்றிதழை வெளியிடுதல் |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
120.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
4 |
திருமண அறிவித்தல் தொடர்பான மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளரின் சான்றிதழை வெளியிடுதல் |
மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளர் |
திருமண தரப்பினர் |
120.00 |
பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் |
|
5 |
பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை நடாத்துதல் |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
6 |
மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை நடாத்துதல் |
மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் |
|
7 |
பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தை நடாத்துதல் |
பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
----- |
----- |
----- |
|||
|
8 |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல் |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
திருமண தரப்பினர் |
900.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
9 |
19 ஆம் பிரிவின் கீழ் திருமண அறிவித்தல் தொடர்பான விசேட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்படும் கோரிக்கைகள் |
பதிவாளர் |
விண்ணப்பதாரர் |
120.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
|
10 |
19 ஆம் பிரிவின் கீழ் திருமண அறிவித்தல் தொடர்பான விசேட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்படும் கோரிக்கைகள் |
மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் |
விண்ணப்பதாரர் |
120.00 |
பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் |
|
11 |
24 ஆம் பிரிவின் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியில் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான இல்ல அனுமதிப்பத்திரத்தை வெளியிடுதல் |
அரசாங்கத்திற்கு |
திருமண தரப்பினர் |
60.00 |
பணமாகச் செலுத்தப்பட வேண்டும் |
முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்தல்
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் இலங்கையில் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்ய முடியும்.
இந்தத் திருமணங்களைப் பதிவு செய்வதற்காகத் திணைக்களத்தினால் முஸ்லிம் திருமணப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்திருமணப் பதிவிற்கு முன்னர் 'நிக்காஹ்' சடங்குகள் நடத்தப்படும்.
நிக்காஹ் சடங்கின் பின்னர், அதனை நடத்திய மௌலவி, மணமகளின் பாதுகாவலர், மணமகன் மற்றும் இரு ஆண் சாட்சிகள் முஸ்லிம் திருமணப் பதிவாளரைச் சந்தித்துத் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாமல் போனால், அத்திருமணத்தைப் பிந்திய முஸ்லிம் திருமணப் பதிவாக மீண்டும் பதிவு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட முஸ்லிம் பதிவாளருக்கு கட்டைளையிட, அதற்காகப் பிரதேச செயலகத்தில் உள்ள மாவட்டப் பதிவாளருக்கு (பிரதேச செயலாளர்) அதிகாரம் உண்டு.
வெளிநாட்டுத் திருமணப் பதிவு (திருமணமானது இலங்கைத் தூதரகங்களில் அல்லது இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களில் பதிவு செய்யப்படுமாயின்)
தூதரக கடமைகள் சட்டத்தின் கீழ், தூதுவர்/ உயர்ஸ்தானிகர் அல்லது தூதரக அதிகாரிக்கு வெளிநாட்டில் திருமணத்தை பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளது.
இங்கு தரப்பினரில் ஒருவரேனும் இலங்கையராக இருத்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட திருமணத்தைச் சிங்களம், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பதிவு செய்யலாம்.
சாதாரண திருமணச் சட்டத்தின் கீழ் அல்லது கண்டிய திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் அல்லது முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள முடியும். (முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு முஸ்லிம் திருமணப் பதிவாளர் ஒருவர் இருத்தல் வேண்டும்)