தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களைத் திருத்துதல்
காணிப் பதிவு அலுவலகத்தில் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பின், அதனைத் திருத்திக் கொள்வதற்காக 1927 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஆவணப் பதிவுச் சட்டத்தின் 35 ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
அந்தக் கோரிக்கையை, தொடர்புடைய தரப்பினர் சம்பந்தப்பட்ட காணிப் பதிவாளருக்கு எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
தேவையான திருத்தத்தை மேற்கொண்டு தருமாறு கோரும் கடிதம்.
தவறாகப் பதிவு செய்யப்பட்ட உறுதிப்பத்திரத்தின் மூலப் பிரதி (மூலப் பிரதி பரிசோதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஒப்படைக்கப்படும்)
அந்த உறுதிப்பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள பத்திருகளின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணப் பிரதிகள்.
தொடர்புடைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.