பணி
அசையாச் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்தல், பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக நாடு முழுவதும் 50 காணிப் பதிவு அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ![]()
ஆவணங்கள்
ஆவணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டம் மற்றும் நொத்தாரிசு கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய ஆவணங்கள் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
கடமை நேரங்கள்
வாரநாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 3.45 வரை (பணக் கருமபீடங்கள் பி.ப. 3.00 மணி வரை மாத்திரமே திறந்திருக்கும்). சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை தினங்களில் அலுவலகங்கள் திறக்கப்படமாட்டாது.
பதிவிற்காக சமர்ப்பிக்கும் நடைமுறை
உறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணிப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு மாவட்டங்களுக்குச் சொந்தமான காணிகள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின்வரும் முறைகளில் பதிவிற்காக ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்:
அ. தபால் மூலம்
ஆ. அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைப்பதன் மூலம்
ஆவணப் பதிவிற்காக சமர்ப்பிக்க உரிமையுள்ள நபர்கள் (ஆவணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் படி)
பதிவுக்காக ஒரு ஆவணத்தை பின்வருபவர்களால் சமர்ப்பிக்கலாம்:
- ஆவணத்தை எழுதி கையொப்பமிட்ட ஒருவர்.
- அதன் கீழ் ஏதேனும் பயன் அல்லது இலாபத்தை கோருபவர்.
- அதன் மூலம் மாற்றமடையும் சொத்து குறித்து ஏதேனும் தொடர்பு அல்லது பிணைப்பு உள்ள ஒருவர்.
- அத்தகைய ஒருவருக்காகச் செயற்படும் சட்டத்தரணி அல்லது நொத்தாரிசு அல்லது பிரதிநிதி.
பதிவிற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
மூலப் பிரதி அல்லது காணிப் பதிவு அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட ஆவணப் பிரதி.
ஆவணங்களைப் பதிவு செய்யக்கூடிய முறைகள்
இச்சேவைகளை விரைவான சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு முறைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
விரைவான சேவை
- காணிப் பதிவு அலுவலகங்களின் ஊடாக விரைவான சேவையின் கீழ் பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்:
- விற்பனை உறுதிப்பத்திரம்
- நன்கொடை உறுதிப்பத்திரம்
- அடமான உறுதிப்பத்திரம்
- முகவரி
- அடமானச் சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கீழான பிரகடனம்
- அடமான ரத்துச் செய்தல்
- குத்தகை உறுதிப்பத்திரம்
- குத்தகையை ரத்துச் செய்தல்
- குத்தகை உறுதி
- முன்னுரிமை அறிவித்தல்
- வலய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகங்கள் ஊடாக அட்டோர்னி அதிகாரப் பத்திரங்களை பதிவு செய்தல் மற்றும் அதன் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளல், அட்டோர்னி அதிகாரப் பத்திரங்களின் ஆவணப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றை விரைவான சேவையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.