Accessibility Tools

Information Icon

ஆவணங்களைத் தேடுதல்
  • காணி ஒன்றிற்குரிய உறுதிப்பத்திரங்களை பரிசோதித்துக்கொள்வதை, அந்த காணி அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள காணிப் பதிவு அலுவலகத்தில் செய்துகொள்ள முடியும்.
  • உறுதிப்பத்திரத்தின் இரண்டாம் பிரதிகளைப் பரிசோதிப்பதற்கும் அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், சம்பந்தப்பட்ட நொத்தாரிசுவினால் இரண்டாம் பிரதிகள் ஒப்படைக்கப்படும் காணிப் பதிவு அலுவலகத்தில் செய்துகொள்ள முடியும்.
விண்ணப்பிக்கும் முறை

நொத்தாரிசு அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவருக்கு.

தேடுதல் விண்ணப்பப்படிவம்
  • குறிப்பிட்ட அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • காணி ஆவணங்களைப் பரிசோதிப்பதற்கான A33(A) விண்ணப்பப்படிவ மாதிரி.
  • உறுதிப்பத்திரங்கள் மற்றும் இரண்டாம் பிரதிகளைப் பரிசோதிப்பதற்கானA33(B) விண்ணப்பப்படிவ மாதிரி.
  • விண்ணப்பப்படிவமானது நொத்தாரிசுவினால் கையொப்பமிடப்பட்டு முத்திரை இடப்பட்டிருத்தல் வேண்டும். ஒரு பிரதிநிதி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பாராயின், அதிகாரமளிக்கும் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணங்கள்
  • தேடல் கட்டணங்கள் பணமாகச் செலுத்தப்பட வேண்டும்.
  • ஒரு காணிக்கான கட்டணம் ரூபாய் 600.00.