நொத்தாரிசு ஒருவர் முதல் முறையாக அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
தெளிவான கையெழுத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்.
சட்டத்தரணி தொழிலுக்கு உள்வாங்கப்பட்டமைக்கான சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி. இது உயர் நீதிமன்றப் பதிவாளரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
2022 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்தச்) சட்டத்தின் பிரகாரம், விண்ணப்பதாரர் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் ஒரு வருட காலம் நொத்தாரிசு தொழிலில் பயிற்சி பெற்றுள்ளார் என்பதற்கான சான்றிதழ்.