Accessibility Tools

Information Icon

காணி ஒன்றின் உரித்தை உறுதிப்படுத்துவதற்காக, ஆவணப் பதிவு முறையை விடுத்து, அரசாங்கப் பொறுப்புடன் காணியின் அமைவிடம், அதன் எல்லைகள் மற்றும் அளவு ஆகியவற்றைக் குறிப்பிடும் ஒரு விசேட வரைபடத்தை உள்ளடக்கி, தனித்துவமான அடையாள எண்ணின் கீழ் உரித்து மற்றும் உரித்தின் தன்மையைக் குறிப்பிட்டு, காணியின் உரிமையைப் பதிவு செய்வதற்காக 1998 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துப் பதிவுச் சட்டம் (பிம் சவிய வேலைத்திட்டத்திற்குரிய சட்டம்) நிறுவப்பட்டது.

 

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணைந்து செயற்படும் நிறுவனங்கள்

நில அளவைத் திணைக்களம்

  • உரிமைகோரும் காணிக்கு நில அளவை வரைபடங்களைத் தயாரித்தல் / அவற்றின் பிரதிகளை வழங்குதல்.

காணி உரித்து நிர்ணய திணைக்களம்

  • தொடர்புடைய காணித் துண்டின் உரித்தை நிர்ணயித்தல்.
  • சட்டத்தின் 55 ஆம் பிரிவின் பிரகாரம் விசாரணைகளை நடாத்துதல் மற்றும் பின்னரான உரிமையை உறுதிப்படுத்துதல்

பதிவாளர் நாயகம் திணைக்களம்

  • மேற்குறிப்பிட்ட நில அளவை வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு, உரித்து நிர்ணயத் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெறும் துணை ஆவணங்களின் மீது உரித்தைப் பதிவு செய்தல்.
  • அந்தக் காணி தொடர்பான பின்னரான கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தல்.
  • ஆவணப் பிரதிகளை (பத்திரு) விநியோகித்தல்.
  • ஈ-உரித்து (e-Title) தரவுத்தொகுப்பைப் பராமரித்தல்.
  • உரித்து காப்புறுதி நிதியத்தைப் பராமரித்தல்.